• Jul 27 2024

தனுஷ் இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுப்பாருன்னு யாருமே நினைக்கலையே.. செம்ம அப்டேட்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!


தனுஷ் நடித்த இயக்கி முடித்துள்ள ’ராயன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்தது என்பதும் இந்த படம் ரிலீசுக்கு கிட்டத்தட்ட தயாராகிவிட்டது என்பது கூறப்பட்டது. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் அதற்கு முன்பே இந்த படத்தின் டீசர் டிரைலர் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தனுஷ் நடித்த 50வது படமான ’ராயன்’ படத்தை அவரே இயக்கி உள்ள நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் மே மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் திடீரென இன்ப அதிர்ச்சியாக யாரும் எதிர்பாராத வகையில் அவர் நடித்து வரும் ’குபேரா’ படத்தின் டீசர் மே இரண்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் உள்பட 5 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார் என்பதும் மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் நாகார்ஜுனா நடித்து வரும் இந்த படத்தை சேகர் கம்முலா இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதத்திற்கும் மேல் முடிந்து விட்டது என்றும் விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் மே அல்லது ஜூன் மாதம் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’ராயன்’ படத்தின் டீசர் மே மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தனுஷ் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement