• Jan 18 2025

கமலுடன் மோதும் தனுஷ்! தயாராகிறது தரமான சம்பவம்!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

கமலஹாசன் அவர்ளின் அருமையான , நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் வெளியாகி பெரிய ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் "இந்தியன்" ஆகும். இவ்வாறு மாபெரும் வெற்றிகொடுத்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆனது 28 வருடங்கள் கழித்து வெளியாக உள்ளது. பலவருடம் கழித்து வரும் திரைப்படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பும் உள்ளது. 


தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் தேர்தல் காரணமாக  குறித்தபடத்தின் ரிலீஸ் ஆனது பின்தள்ளப்பட்டு வந்த நிலையில் தேர்தல் முடிந்த அடுத்த வாரமே திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


இந்த நிலையிலேயே கமல்காசனை அடுத்து திறந்த நடிப்பையும் , ஹோலுவூட் வரை சென்று சாதனையையும் படிக்கக்கூடிய நடிகர் தனுஷ். இவர் தற்போது தனது சொந்த இயக்கத்தில் அவரே நடிக்கும் "ராயன்" படத்தை தயாரித்து வருகின்றார். குறித்த திரைப்படம் "கேங்ஸ்டர்" திரைப்படமாக காணப்படுவதனாலும் , முதல் முறையாக தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன் நடிக்குறார் என்பதனாலும் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் காணப்படுகின்றது.


இந்த நிலையில் ராயன் திரைப்படமும் தேர்தல் முடிவடைந்து அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளது என்ற தகவலும் சினிமா துறையினரிடையே பரவி வருகின்றது. இதனால் கமலுக்கும் , சங்கருக்கும் சவால் விடுகிறார் மற்றும் அவர்களுடன் போட்டியிடுகிறார் என்று சமூக வலைத்தளங்களில் தனுசை ட்ரோல் செய்யும் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement