• Jan 19 2025

முத்துவை ஷூ காலால் மோசமாக மிதித்த ரவுடி.. ரோகிணியை வெளுத்து வாங்கிய விஜயா!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய நாளுக்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம். 

அதில், விஜயாவும் ஸ்ருதியின் அம்மாவும் நான் தந்த  மாலையைத்தான் போடணும் என வாக்குவாதம் செய்ய, இறுதியில் ஸ்ருதி இரண்டு பேரின் மாலையையும் வாங்கி போட்டுக் கொள்கிறார். இதை பார்த்து அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

வெளியே இருக்கும் முத்து அண்ணாமலையை கூப்பிட்டு வைத்துக்கொண்டு கண்டிப்பா இப்போ ஒரு புயலே வரப்போகுது என எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் ஸ்ருதி இரண்டு மாலையும் அணிந்து வருவதைத் பார்த்து, என்ன இந்த பொண்ணு இப்படி பண்ணிடுச்சு என சொல்ல, அந்த இடத்திற்கு வந்த விஜயா ஸ்ருதியை பத்தி பெருமையாக பேசி பணக்கார வீட்டு பொண்ணு என்பதால் தான் இப்படி குணமா இருக்கு என சொல்ல, மீனாக்கிட்டையும் எல்லா நல்ல குணமும் இருக்கு என  பதிலடி கொடுக்கிறார் அண்ணாமலை.

மறுபக்கம் வாசுதேவனும் அவரது மனைவியும்  இரண்டு பேரை ரெடி பண்ணி, முத்துவை கோபப்பட வைக்க சொல்லி அனுப்புகிறார்கள். முதலில் ஒருவர் வந்து முத்துப் பக்கத்திலிருந்து போனில் பேசுவது போல பேசிக்கொண்டே தனது ஷூ காலால் முத்துவின் காலை போட்டு மிதிக்கிறார். வலி தாங்க முடியாமல் முத்து தவிக்கிறார். ஆனால் சண்டை போடுவார் என எதிர்பார்த்த நேரத்தில், 'சாமியே சரணம் ஐயப்பா உங்க கால கொஞ்சம் எடுங்கப்பா' என்று சமாதானமாக பேசுகிறார். மீனா அவரிடம் சண்டைக்கு போக முத்து மீனாவையும் அமைதியாக இருக்குமாறு பிரச்சினையை தீர்த்து வைக்கிறார்.

ஸ்ருதியின் அம்மா இதை பார்த்து கோபப்பட்டு அவருக்கு திட்ட, ஷு காலால் அவனை ரொம்ப மோசமாக தான் மிதிச்சன். ஆனா அவன் கோவப்படல. எனக்கு தெரிஞ்சு அவன் கோபப்பட வைக்கிறது ரொம்ப கஷ்டம் என சொல்கிறார்.


இதை அடுத்து ரோகிணி ஏற்பாடு செய்த நபர் இன்னும் காணலையே என வித்தியாவிடம் கேட்டுக் கொண்டிருக்க, அப்போது உள்ளே வரும் விஜயா, எங்க உங்க அப்பா என கேட்டுக் கோபப்படுகிறார். அதற்கு ரோகிணி இன்னும் பிளைட்ல தான் இருக்காரு, போன் நாட் ரீச்சபிள்ல தான் இருக்கு என சமாளிக்கிறார். குழந்தைக்கு சோறு ஊட்டுற கதையை எவ்வளவு நேரத்துக்கு தான் சொல்லிட்டு இருப்பா என விஜயா அவருக்கு திட்டுகிறார்.

மேலும், உங்க அப்பா வருவார் என்று ஸ்ருதியின் அப்பா, அம்மா கிட்ட சொல்லிட்டன். அவங்க அவங்களுடைய சொந்தக்காரங்க கிட்டையும்  சொல்லி இருக்காங்க, அவர் வராமல் போயிட்டா என்னுடைய மானம்தான் போகும் என ஆவேசப்படுகிறார். 

அத்துடன் இந்த பிரச்சினை ஓய்ந்ததும் ரோகிணியின் கழுத்தை  பார்த்து என்ன நகையே இல்லாம இருக்க, ஸ்ருதி கழுத்துல நகை போடவே இடமில்லாமல் அவ்வளவு நகை போட்டுக்கிட்டு இருக்காங்க என சொல்கிறார். பிறகு, சரி உங்க அப்பா வரும்  வரைக்கும் இந்த நகையை போட்டுக்கிட்டு இரு என தனது கழுத்தில் இருக்கும் நகையை கழட்டி ரோகிணிக்கு போடுகிறார்.

அடுத்து ரோகிணி ஏற்பாடு செய்த நபர் மண்டபத்திற்குள் வர, வித்தியா முத்துவை காட்டி இவனத்தான் நீ குடிக்க வைக்கணும் மத்தத நாங்க பார்த்துக்கிறோம் என்ன சொல்றார். அதேபோல ஸ்ருதியின் அம்மா  முத்திவை மீண்டும் வம்பு இழுக்க வேறொரு ஆளை அனுப்பி வைக்கிறார். இதுதான் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்.

Advertisement

Advertisement