• Sep 29 2024

இந்த வார டாஸ்கில் கண்ணீரில் ததும்பிய CWC ஷோ... அம்மாவோடு சேர்ந்து அழுத இர்பான்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி தற்போது ஐந்தாவது சீசனில் வெற்றிகரமாக கால் பதித்து பயணித்து வருகின்றது.

குக் வித் கோமாளி  சீசன் ஐந்தின் 18 வது வாரத்தில் வசந்த் வசி கண்ணீரோடு வெளியேறி இருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட பிரியாணி டாஸ்க் சரியாக செய்து முடிக்காத காரணத்தினால் அவர் எலிமினேட் ஆனார்.

இந்த நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் பங்கு பற்றிய போட்டியாளர்கள் எல்லாரும் கண்ணீர் விட்டு அழும்  அளவிற்கு டாஸ்க் கொன்று வைக்கப்பட்டுள்ளது.


அதாவது இந்த வாரம் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு கடந்த காலத்தில் மறக்கப்பட்ட உணவுகளை சமைத்து அதனை போட்டியாளர்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் டாஸ்க்.

இதன் மூலம் போட்டியாளர்களின் குடும்பத்தினரும் இந்த ஷோவுக்கு வந்துள்ளார்கள். இதன் போது அவர்கள் கண்ணீருடன் நினைவுகளை பகிர்ந்து கொண்ட காட்சிகள் தற்போது ப்ரோமோவில் வைரல் ஆகி வருகின்றன.

Advertisement

Advertisement