• Jun 29 2024

தசாவதாரமும் தோற்றுப் போகும்... இந்தியன் தாத்தாவுக்கு மொத்தம் எத்தனை கெட்டப் தெரியுமா?

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படத்தின் டிரைலர் நேற்றைய தினம் வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் இதில் கமலின் நடிப்பையும், இயக்குனர் சங்கரின் படைப்பாற்றலையும் பார்த்து வியந்து வருகின்றார்கள்.

இந்தியன் 2 படத்தின் டிரைலர் மிகச் சிறப்பாக உள்ளதாக ரசிகர்கள் பலரும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். அந்த அளவுக்கு இந்த படத்தை பெரிய அளவில் ஷங்கர் எடுத்துள்ளார் என்பதை இந்த டிரைலரை பார்த்தாலே தெரிகின்றது.

ஆரம்பத்தில் கமல்' எல்லாம் இன்பமயம்' என்ற படத்தில் தான் அதிக கெட்டப் போட்டு நடித்துள்ளார். அதற்கு பிறகு 'தசாவதாரம்' படத்தில் பத்து வேடத்தில் நடித்திருப்பார். தற்போது இந்தியன் 2 படத்தில் ஆக மொத்தம் 12 கெட்டப்பில் நடித்துள்ளார் கமல்.


அதுவும் இந்தியன் 2 படத்தில் 7 கெட்டப்பும்,  இந்தியன் 3 படத்தில் ஐந்து கெட்டப் என விதம் விதமான கெட்டப்புகளில் வந்து அசத்தியிருக்கின்றாராம் கமல்.

ஹாலிவுட் சினிமாவில் கெட்டப் என்பதற்கு பெயர் போன நடிகராக கமல் இருப்பதோடு அவர் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு வித்தியாசமான கெட்டப்பில் வந்து அசத்தி இருப்பார்.

ஆனாலும் இந்தியன் 2 படத்தில் இத்தனை கெட்டப் போட்டு வருவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதன் டெய்லரை பார்த்த பிறகு தான் பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றார்கள்.

Advertisement

Advertisement