• May 09 2026

'சலார்' வசூல் விவகாரத்தில் கிளம்பிய சர்ச்சை! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு அதிரடி காட்டிய தயாரிப்பு நிறுவனம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சலார். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவான இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.

ஆனால், அந்த எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் திருப்திப்படுத்த வில்லை. இதனால் இப்படத்தின் வசூல் நான்காவது நாளில் இருந்து குறைய துவங்கியுள்ளது.

இந்த நிலையில், நடிகர் பிரபாஸ் நடித்த சலார் திரைப்படம் தற்போது வரையில் 500 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


மேலும், டங்கி படத்தை வசூல் ரீதியாக சலார் முறியடித்த நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அனைத்தும் பொய் என ஷாருக்கான் ரசிகர்கள்  டிரெண்ட் செய்து வந்தனர்.

இவ்வாறு சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், ஞாயிற்றுக்கிழமைக்கு பிறகு வசூல் அறிவிப்பை வெளியிடாமல் இருந்து வந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது வசூல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சலார் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை சரியாக பயன்படுத்திக் கொண்டு 500 கோடி வசூலை ஈட்டியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement