• Apr 26 2024

இசையமைப்பாளர் டி.இமானுக்கு குவியும் வாழ்த்துக்கள்-இது தான் விசயமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பாலிவுட் என பல மொழிகளில் இசை அமைப்பாளராக ஜொலித்து வருகிறார் டி.இம்மான். 

இவர்  தேசிய திரைப்பட விருது, பல ஃபிலிம் ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல பாராட்டுகளை  கைவசம் வைத்துள்ளார். 2001 ஆம் ஆண்டு காதலே சுவாசம் என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், தமிழன், சேனா, விசில், கிரி, சின்னா, பிப்ரவரி 14, அன்பே வா, மதராசி உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு  இசையமைத்துள்ளார்.

கடந்தாண்டு வெளியான சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தில் டி இமானின் குரலும் இசையும் பட்டையை கிளப்பி இருந்தது.


மேலும்  இந்த ஆண்டு எதற்கும் துணிந்தான், யுத்தம் சத்தம், மைடியர் பூதம், பொய்க்கால் குதிரை, கேப்டன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தார்.  இதற்கிடையே சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்தார்.அத்தோடு  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது முதல் மனைவியான மோனிகாவை விவகாரத்தை செய்துவிட்ட டி இமான், சமீபத்தில் எமிலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.


டி. இமானுக்கு ஏற்கனவே இரட்டை பெண் பிள்ளைகள் இருந்த நிலையில், ஒரு பெண் குழந்தையுடன் எமிலி என்பவரை திருமணம் செய்து இருந்தார். எனினும் இது குறித்து அவரது மனைவி கடுமையாக சாடியும் இருந்தார். இவ்வாறுஇருக்கையில் , தற்போது டி இமானுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த அவர் தனது twitter பக்கத்தில் இசைத்துறையில் சிறப்பாக பங்காற்றுவதற்காக சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் கவுன்சிலின் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் பெறுவதில் மகிழ்ச்சி அனைவரின் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.



 


Advertisement

Advertisement

Advertisement