• Sep 20 2024

தளபதி 66வது படத்தில் இணைந்த பிரபல நடிகர் -அட இவர் தான் இப்படத்தில் வில்லனா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலிலும் அள்ளிக் குவித்தது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் முக்கிய நடிகர்களான பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

அப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் பெரிய செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தில் நடிக்கவுள்ள மேலும் ஒரு நடிகரை அறிவித்துள்ளனர்.

அதன்படி ஸ்ரீகாந்த் என்ற தெலுங்கு நடிகர் இப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் கடைசியாக வில்லனாக நடித்த அகண்டா திரைப்படம் அங்கு பெரிய வரவேற்ப்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement