• Sep 19 2024

சிரஞ்சீவி - நயன்தாரா நடித்த 'காட்பாதர்' டீஸர் வெளியானது..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

1978ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகியதில் இருந்து தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சிரஞ்சீவி.இவர் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் என புகழ் பெற்றவர்.

திரையுலகில் 7 முறை பிலிம்பேர் விருதைப் பெற்ற ஒரே தெலுங்கு திரைப்பட நடிகர் என்ற பெருமை பெற்றவரும் ஆவார்.

சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் நடிகர் பிரித்வி ராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிஃபர். இப்படம்,மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனை நிகழ்த்தியது. இப் படத்தின் வெற்றியால் மற்ற மொழிப் படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இதை அடுத்து இந்தப் படம் இப்போது தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. அதில் மோகன்லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார்.கதாநாயகியாக நயன்தாரா நடிக்கின்றார்.

அத்தோடு சல்மான் கான் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். 'காட்ஃபாதர்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.



Advertisement

Advertisement