• Sep 21 2024

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வலம் வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிகளவான வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. அத்தோடு இவர் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

அந்த வகையில் இவர் தற்பொழுது சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார் இவருடன் நடிகை காயத்ரி நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது.

இப் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டது என்பதும் ஆனால் ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கடைசியாக இந்த படம் ஜூன் 24ஆம் தேதி ரிலீசாகுமென அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஒரு நாள் முன்னதாக ஜூன் 23ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற ஆர்கே சுரேஷ் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன்ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்த 'மாமனிதன் திரைப்படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement