• Sep 20 2024

பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து கூறும் பிரபலங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பக்ரீத் பண்டிகை உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. பெரியவனின் தூதரான இப்ராஹீம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் பக்ரீத் பண்டிகையை ஒட்டி முஸ்லிம் பெருமக்களுக்கு நடிகரும் அரசியல் தலைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் உலகநாயகன் கமல் ஹாசன் அவர்கள்; "தமக்கு கிடைக்கும் நன்மைகளை முப்பாகப் பங்கீடாய் பிறர்க்கும் தந்து ஈகையின் மகிழ்வை உலகிற்கு உணர்த்தும் பக்ரீத் திருநாள் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு என் வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.

பிரபல நடிகை நக்மா "எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கவும், நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் சரியான பாதையைக் காட்டவும் விரும்புகிறேன். அனைவருக்கும் ஈத் முபாரக்" என வாழ்த்து கூறியுள்ளார்.

கௌதம் கார்த்திக் தன் பதிவில் "உங்களின் ஆசிர்வதிக்கப்பட்ட பக்ரீத் மற்றும் உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அற்புதமான நேரத்தை கொண்டிருக்கட்டும் ரமலான் என குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Advertisement

Advertisement