• Sep 20 2024

பொன்னியின் செல்வன் படத்தில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்தாரா?..அப்புறம் என்ன ஆச்சு!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமா உலகில் தமது வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பிரபலங்களுக்குள்ளும் மற்றவர்களைப் போன்றே ஒரு கனவு இருக்கும். அதே போன்றே இயக்குநர் மணிரத்தினத்திற்குள்ளேயும் ஒரு கனவு நீண்டநாளாக இருந்து வந்தது. அதாவது இவர் பல்வேறு நாவல் மற்றும் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து பல கதைகளை உருவாக்கி வெற்றி கண்டுள்ளார். இருப்பினும் அவரது கனவு பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று நாவலை எப்படியாவது படமாக எடுத்து விட வேண்டும் என்பதுதான். நீண்டநாள் முயற்சிக்குப் பின்னர் அந்த ஆசையை தற்போது நிறைவேற்றியும் இருக்கிறார்

இந்தநிலையில் வரலாற்று சிறப்புமிக்க படமான ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. அதில் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் திகதி பிரமாண்டமாக வெளியாக இருக்கின்றது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் , திரிஷா மற்றும் ஜெயம் ரவி போன்ற பிரபலங்களின் கதபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றிருந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மணிரத்னம் “கடந்த 1980, 2000 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் இந்தப்படத்தை எடுப்பதற்காக முயற்சி செய்தேன். இந்தப்படம் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்திருக்க வேண்டிய படம் என்றும் நாடோடி மன்னன் படத்திற்குப் பின்னர் இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்தார். ஆனால் சில காரணங்களால் அது முடியவில்லை” எனக்கூறியுள்ளார்.

இந்தநிலையில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய்யும், மகேஸ்பாபுவும் தான் என ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது 2010-ஆம் ஆண்டு மணிரத்னம் அவர்கள் இயக்குநர் வசந்துடன் இணைந்து ‘பொன்னியின் செல்வன்’ திரைக்கதையை எழுதி அதனைப் படமாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். அந்தசமயத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்யும், அருள்மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபுவும் நடிக்க ஒப்பந்தம் ஆகினர். ஆனால் ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அப்போது அப்படத்தினுடைய படப்பிடிப்புகள் நடைபெறவில்லை.

இதனால் அந்த படத்துக்காக ஒதுக்கிய தேதிகளைத்தான் விஜய் பின்னர் 'துப்பாக்கி' படத்துக்காக கொடுத்து அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement