• Jan 18 2025

பெண்களிடத்தில் அடிக்காமலும், முத்தம் கொடுக்காமலும் இருக்க முடியாது... அனிமல் திரைப்பட வைரல் வீடியோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

டிசம்பர் 1ம் தேதி வெளியாக உள்ள அனிமல் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கழுத்தை பிடிப்பது, கிஸ் அடிப்பது என எல்லை மீறி நடித்துள்ளார் படத்தில் நடிகர். இந்நிலையில், முன்னதாக அவர் அளித்த த்ரோபேக் பேட்டியில் நமக்கு பிடித்த பெண்ணை அடிக்காமல் இருப்பதில் எந்தவொரு எமோஷனும் இல்லை என பேசிய  இருந்தார்.


இந்த வீடியோவை நெட்டிசன்கள் தற்போது வைரலாக்கி சந்தீப் ரெட்டி வங்கா உண்மையாவே  ஒரு அனிமல் தான் என்றும் அவரது படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் தற்போது எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள அனிமல் படம் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல பெண்களை அடக்கி ஆள ஆரம்பித்து விட்டார் சந்தீப் ரெட்டி வங்கா என நெகட்டிவிட்டியை பரப்ப ஆரம்பித்து விட்டனர்.


நமக்கான பெண்கள் என்றால் அவர்களை அடிக்காமலோ, விருப்பப்படும் இடத்தில் தொடாமலோ, அசிங்கமாக பேசாமலோ, முத்தம் கொடுக்காமலோ இருக்க முடியாது என்றும் அப்படி வாழ்ந்தால் எந்தவொரு உணர்வும் இருவருக்குள்ளும் இருக்காது என வெறிபிடித்தவர் போல சந்தீப் ரெட்டி வங்கா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.ஆனால், அவர் இயக்கிய அர்ஜுன் ரெட்டி படத்தை தான் ஒட்டுமொத்த இளைஞர்களும் கொண்டாடினர். டிசம்பர் 1ம் தேதி வெளியாக உள்ள அனிமல் படத்தையும் பார்க்க ரசிகர்கள் ரெடியாகி வருகின்றனர்.

Advertisement

Advertisement