• May 20 2024

இளையராஜாவிடம் கதிரை வாங்ககூட காசில்லையா? விமர்சித்த ரசிகருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கொடுத்த பதிலடி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தவர் தான் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.இவர் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கென்று அங்கீகாரத்தை கொடுத்தது தான் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் தான்.

ஆனாலும் அவர் நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். இவர் இயக்கத்தில் இதுவரை ஆரோகணம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. இதில் குறிப்பாக அவர் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று குவித்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக விருமாண்ட பட ஹீரோயின் அபிராமி நடித்து வருகிறார். பிரபல இயக்குநர் மிஷ்கின் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.

அத்தோடு  கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் இசைப் பணிகளுக்காக இசைஞானி இளையராஜாவை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். மேலும் அந்த புகைப்படத்தில் இளையாராஜா முன் லட்சுமி ராமகிருஷ்ணன் தரையில் அமர்ந்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள் கோபமடைந்தனர்.

ஏன் இளையராஜாவிடம் சேர் வாங்க கூட காசில்லையா என ஒருவர் கேட்க, மற்றொருவர் அவங்களுக்கு சேர் கொடுத்தா கொறஞ்சி போயிடுவாரு, சக மனிதர்களுக்கு மதிப்பளிக்க தெரியாத மனிதன் இளையராஜா என்று விமர்சித்து பதிவிட, இதைப்பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன், இளையராஜா கடவுளுக்கு நிகரானவர், அவர் காலடியில் அமர்ந்திருப்பதை நான் பாக்யமாக கருதுகிறேன். மேலும் தரையில் அமர்வது உடலுக்கு நல்லது. அதனை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.


Advertisement

Advertisement