• May 09 2024

விருமன் சக்ஸஸ் மீட்டில் அதிதி சங்கருடன் கபடி விளையாடிய கார்த்தி- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

'கொம்பன்' படத்தை தொடர்ந்து கார்த்தி மீண்டும் முத்தையா இயக்கத்தில் நடித்த திரைப்படம் தான் விருமன். இந்தத் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை மிகவும் பிரமாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாகியது. இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகமாகக் குவிந்து வருகின்றது.

மேலும்இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.இவரது இசையில் வெளியான அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன.அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்திருப்பதோடு  ராஜ்கிரன், சூரி, பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.

விருமன் படம் தொடர்ந்து வசூலில் கெத்து காட்டி வரும் நிலையில்,  படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஏற்கனவே  படத்தின் லாபத்தில் இருந்து நடிகர் சங்கத்திற்கு ரூபாய் 25 லட்சத்தை சூர்யா வழங்கிய நிலையில்,நேற்று மிகப்பிரமாண்டமாக படக்குழுவினர் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் விதமாக சக்ஸஸ் மீட் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


இதில் நடிகர் சூர்யா, கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ் என பிரபலங்கள் கலந்து கொண்டனர். விஜிபி -யில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சக்ஸஸ் மீட்டின் போது, அதிதி ஷங்கர் குட்டை உடையில் நடிகர் கார்த்தியுடன் கபடி விளையாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement