• Aug 04 2026

வீட்டை மீட்கும் நேரத்தில் ரோகிணி எடுத்த அதிர்ச்சி முடிவு.? முத்துவின் சபதம் நிறைவேறுமா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், முத்துவின் முதலாளி முத்து ரெடி பண்ணிய கார்களை வந்து பார்த்து ஆச்சரியப்படுகின்றார். அவர் உடனே முத்து காசு கேட்ட பைனான்சியரும் வருகின்றார். இதன் போது செல்வம் முத்துவின் பிரச்சினை பற்றி பேச, முத்துவின் முதலாளியும் அவருக்கு சப்போர்ட் பண்ணுகின்றார்.

இதனால் அந்த பைனான்சியர், நீங்கள் கையெழுத்து போட்டுக் கொடுத்தால் நான் பணம் கொடுக்கின்றேன் என்று கூற, அவரும் உடனே சரி என சொல்கிறார். இதனால் முத்து அவருக்கு கையெடுத்து கும்பிடுகின்றார்.

இதனை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற முத்து அண்ணாமலையுடன் நடந்தவற்றை கூறி சந்தோஷப்படுகிறார். மேலும் 10 லட்சம் அட்வான்ஸ் வாங்கியதாகவும் அதனை அவருடைய கையில் கொடுத்து சந்தோஷப்படுகிறார். இதைப் பார்த்து விஜயாவும் சந்தோஷப்படுகின்றார்.

அதன்பின்பு மனோஜுக்கு கால் பண்ணிய விஜயா, முத்து வீட்டு பிரச்சினைகளை முடித்து விட்டதாகவும் அட்வான்ஸ் 10 லட்சம் கொடுத்ததாகவும், மீதி பணம் நாளைக்கு கிடைத்துவிடும், வீட்டை மீட்டு விடலாம் என்று சொல்கிறார். இதைக் கேட்டு மனோஜ் ஆச்சரியப்படுகின்றார். மேலும் என்னால் இந்த ஷோரூமில் இருந்து கஷ்டப்பட முடியாது என்று புலம்புகின்றார்.


இதற்கிடையில் அங்கு வந்த ரோகிணி, அவார்ட் பங்க்ஷன் ஒன்றுக்கு செல்ல வேண்டும், நீயும் அதற்கு வரவேண்டும் என்று சொல்கிறார். ஆனால் மனோஜ், அம்மா திட்டுவாங்க அதனால் நான் வரமாட்டேன் என்று கூறுகின்றார். 

ஆனாலும் ரோகிணி மீண்டும் மீண்டும் கேட்க, வீட்டு பிரச்சனை இப்போதுதான் முடியும் தருவாயில் இருக்கின்றது, முத்து அதனை மீட்க காசை ரெடி பண்ணி விட்டார் என்ற உண்மையை ரோகிணிக்கு மனோஜ் தெரிவிக்கின்றார்.

இதனால் வீட்டுக்கு சென்ற ரோகிணி அதைப்பற்றி யோசித்து, சிந்தாமணியை வரவழைத்து நடந்தவற்றை கூறுகின்றார். மேலும் நான் வீட்டுக்கு போக மட்டும், அந்த வீட்டை அவர்களுக்கு கிடைக்கக்கூடாது, ஏதாவது பண்ணுங்கள் என்று கூறுகின்றார். சிந்தாமணியும் இவையெல்லாம் ரோகிணிக்காக தான் பண்ணுவதாக கூறி, ரோகிணியை நம்ப வைக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement