• May 21 2024

ஆனா சும்மா இருக்குறது எப்படின்னு நீ கத்துக்கிட்ட- சிவாஜி குறித்து பேசி நெகிழ்ந்த ரஜினி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிப்பின் திலகம் என்று அழைக்கப்பட்டு வருபவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தனது சிறந்த நடிப்பினால் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்த இவர் மீது இன்றும் அனைத்து ரசிகர்களுக்கும் மதிப்பும் மரியாதையும் உள்ளது.

இவர் அடுத்த தலைமுறை நடிகர்களான கமல் மற்றும் ரஜினிகாந்துடன் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரையும் தனது பிள்ளைகள் போல் பார்த்தவர் சிவாஜி.ஜஸ்டிஸ் கோபிநாத், நான் வாழ வைப்பேன், படிக்காதவன், விடுதலை மற்றும் படையப்பா ஆகிய ஐந்து படங்களில் நடிகர்கள் சிவாஜி கணேசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த நிலையில் ரஜினி சில காலம் ஆண்டுக்கு ஒரு படம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் என குறைவான படங்களிலேயே நடித்தார்.அப்போது,"அவன் ஏன்டா இப்படி பண்றான். அவனுக்கு யாரும் எடுத்து சொல்ல மாட்டீங்களா? மார்கெட் இருக்கும்போதுதானே நெறைய படங்கள்ல நடிக்கணும்" என்று சிவாஜி பிறரிடம் ரஜினியைப் பற்றி வருத்தமாகக் கூறுவாராம்.

அதன் பின்னர் ஒரு நாள் ரஜினியிடம் பேசிய சிவாஜி,"நடிக்கிற நேரத்துல நடிக்காம தியானம், இமைய மலைன்னு நீ உன் நேரத்த வீணடிக்கிறதா நா நெனச்சேன். ஆனா என்னுடன் இருந்த சண்முகம் இறந்த பிறகு எனக்கு என்ன பண்றதுன்னு தெரில. பணத்துக்காக நடிக்கிறதா இல்ல பேருக்காக வித்யாசமா நடிக்கிறதா. எதுவுமே தெரியாம இருக்கேன். ஆனா சும்மா இருக்குறது எப்படின்னு நீ கத்துக்கிட்ட. யார் என்ன சொன்னாலும் சரி, நீ செய்றதுதான் கரெக்ட்" என்று சிவாஜி தன்னிடம் கூறியதாக ரஜினி கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement