• May 10 2024

பாலிவூட்டிலும் முன்னணி நடிகருடன் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா- ரிலீஸ் எப்ப தெரியுமா!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதியில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படம் இவருக்கு சிறந்ததொரு வரவேற்பைக் கொடுத்துள்ளது.இதனைத் தொடர்ந்து தமிழில் விஜய்யுடன் சேர்ந்து வாரிசு என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

தமிழில் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.இந்தப் படத்தில் மிகவும் போல்டான கேரக்டரில், குடும்பத்தினர் மீது மிகவும் பாசம் வைத்துள்ள கேரக்டரில் நடித்துள்ளாராம் . படத்தில் விஜய்க்கு இரண்டு கெட்டப்புகள் உள்ளதாக கூறப்படும்நிலையில், ராஷ்மிகா யாருக்கு ஜோடியாகியுள்ளார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவரும் ராஷ்மிகா, பாலிவூட்டிலும் தனது என்ட்ரியை கொடுக்கவுள்ளார். நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நீனா குப்தா ஆகியோருடன் இந்தப் படத்தில் ராஷ்மிகா நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் காமெடி களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். அக்டோபர் 7ம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விகாஷ் பால் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement