விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த ஜூலை 31ஆம் தேதி வெளியான ‘கிங்டம்’ திரைப்படம், பான் இந்தியா ரீதியாக grand release ஆனது. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பிய இப்படம், அதன் டிரெய்லர், இசை மற்றும் பிரமாண்ட காட்சிகளால் பெரும் கவனத்தை பெற்றிருந்தது. ஆனால், படம் திரைக்கு வந்த பிறகு விமர்சனங்கள் இருமுகமானதாக மாறியுள்ளன.
அதிலும் குறிப்பாக, பிரபல யூடியூப் விமர்சகர் “ப்ளூ சட்டை மாறன்” தனது விமர்சனத்தில், இப்படம் குறித்து கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். படம் பார்த்த பின் தனது விமர்சன வீடியோவில், ப்ளூ சட்டை மாறன், “இந்த படம் கிட்டத்தட்ட ரெட்ரோ மாதிரி தான் இருக்கு. ரெட்ரோ மேக்கிங்கா இருந்தாலும் அது நம்மை ஈர்க்கல. ஆனா இந்த 'கிங்டம்' படத்தில மேக்கிங் நன்றாக இருக்கு. ஆனா ரெண்டுக்கும் ஒத்துமை என்னன்னா ரெண்டுமே மொக்க படம்தான்!” என்றார்.
படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.15 கோடி வசூலித்ததாக box office தரவுகள் தெரிவித்தன. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறனின் இந்தக் கருத்தைக் கேட்ட ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
Listen News!