• May 21 2024

வெளியானது Biggboss-7 முழு போட்டியாளர்கள் விபரம்... அப்போ காதல், கலாட்டா, சண்டை, சச்சரவு confirm..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்ரி ஷோவாக ஒளிபரப்பாவது தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது 6சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் அக்டோபர் 1-ஆம் தேதி இதன் 7-ஆவது சீசன் ஆரம்பமாக இருக்கின்றது. 


அத்தோடு பிக்பாஸில் இந்த முறை ஒரு வீடு அல்ல, இந்த முறை இரண்டு வீடுகள் எனவும், பிக்பாஸும் இரண்டு தான் எனவும் ஏற்கெனவே தகவல் வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் பார்க்கும் போது இந்த ஷோ ஆரம்பமாக இன்னும் 1வாரம் மட்டுமே எஞ்சி உள்ளது. அதாவது biggboss grand launch 1-ஆம் தேதி மாலை 6மணிக்கு நடைபெறவுள்ளது. 


இதனைத் தொடர்ந்து போட்டியாளர்கள் குறித்த தகவல்களும் அடிக்கடி வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 7இல் கலந்து கொள்ளவுள்ள முழு போட்டியாளர்களின் விபரம் இணையத்தில் கசிந்துள்ளது.


அந்தவகையில் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா, ரவீனா தாஹா, தர்ஷா குப்தா, பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் (குமரன்), ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா, நிலா (அன்பே ஆருயிரே பட நடிகை), மாடல் அனன்யா, நிவிஷா, தொகுப்பாளினி ஜாக்லின், ரோஷினி ஹரிப்பிரியன், உமா ரியாஸ் கான், ஸ்ரீதேவி விஜயகுமார், யுதன் பாலாஜி, நடிகர் அப்பாஸ், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சத்யா – கனா காணும் காலங்கள், விஷ்ணு குமார் – ஆஃபிஸ் சீரியல், தொகுப்பாளர் ரக்ஷன், மா.கா.பா ஆனந்த், பப்லூ பிரித்வி ராஜ், விஜே அர்ச்சனா (பாரதி கண்ணம்மா) போன்ற 21பேரின் பெயர் லிஸ்ட் வெளியாகி இருக்கின்றது.

இது எந்தளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement