• Oct 22 2024

மறைந்தாலும் மறையாத குரல்... இசை உலகின் அரசன் எஸ். பி .பாலசுப்ரமணியம் அவர்களில் நினைவுநாள் இன்று...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

எஸ் பி பாலசுப்ரமணியம் தனது காந்த குரல் வளத்தால் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பாடல் மூலம்  ரசிகர்களின் மனங்களை வென்றவர் . அணைத்து  உணர்வுகளுக்கும் துணையாய் இருந்து ஒலித்த குரல் எஸ்பிபி அவர்களுடையது . அவர் நம்மை விட்டு மறைந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகிறது.


பி.சுசிலாவுடன் இணைந்து பாடிய "இயற்கை என்னும் இளைய கன்னி..." பாடல் தான் எஸ்பிபி அவர்கள் பாடிய முதல் தமிழ் சினிமா பாடல். தொடர்ந்து நடிகர்  எம்ஜிஆருக்காக 'அடிமைப்பெண்" படத்தில் அவர் பாடிய "ஆயிரம் நிலவே வா" பாடல் மிகப் பெரிய ஹிட்டானது.


பின்னணி பாடகர், டிவி பிரபலம், இசை அமைப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர், திரைப்பட தயாரிப்பாளர் என தான் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றிக் கண்டவர் எஸ்பிபி அவர்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 6 மொழிகளிலும்  இனிமையான காலத்தால் அழிக்க முடியாத  ஆயிரக் கணக்கான பாடல்களை தனது  குரலால் பாடியுள்ளார். இவர் பத்ம பூஷன், பத்மவிபூஷன் போன்ற பல  விருதுகளையும் வென்றுள்ளார்.


இசை உலகின் ஜாம்பவானாக இருந்த இவர்  கொரோனா பாதிப்பை தொடர்ந்து ஏற்பட்ட பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு ஒரு மாத காலமாக வைத்திய சாலையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ம் தேதி  உயிரிழந்தார்.


மக்கள் நெஞ்சில் நீக்கா இடம் பிடித்த இசை குரல் ஓய்ந்து இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகிறது. அவர் மறைத்தாலும் அவரின் பாடல்கள் அவரை மறக்க விடுவதில்லை.


Advertisement