• Jan 18 2025

பிக் பாஸ் சீசன் 8 அடுத்த போட்டியாளர் ரெடி... பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்... யார் தெரியுமா?

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

பல ரசிகர்களின் மனங்களை வென்ற நிகழ்ச்சிதான் விஜய் டிவியின் பிக் பாஸ். இதனுடைய 8வது விரைவில் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியை 7வது சீசன் வரை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன், தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தற்காலிகமாக விலகப்போவதாக கமல் அறிவித்தார். 


சிம்பு, ரம்யா கிருஷ்ணன், சூர்யா என பலருடைய பெயர்கள் இதில் கூறப்பட்டு வந்த நிலையில், இறுதியாக விஜய் சேத்துபதி தான் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை.


இந்த நிலையில், சீசன் 8ல் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இதில் தற்போது பிக் பாஸ் 8ல் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் அருண் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும். 


Advertisement

Advertisement