• Apr 28 2026

பிக் பாஸ் கெமியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.. வேற லெவலில் வைப் பண்ணுறாங்களே.!

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கிய கெமி, பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். 

அந்த நிகழ்ச்சியில் தனது சுறுசுறுப்பும் நகைச்சுவை உணர்வும் மூலம் கவனம் பெற்ற அவர், தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 9’ நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக் பாஸ் வீட்டில் கெமி தனது திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடியிருந்தாலும், நாமினேஷன் சுற்றில் சிக்கி எதிர்பாராத விதமாக வெளியேறினார். அவரது வெளியேற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. பலரும் அவர் ஒரு வலுவான போட்டியாளராக இருந்தார் என கருத்து தெரிவித்தனர்.


பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கெமி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கொண்டாட்டத்தின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.


Advertisement

Advertisement