• Jun 07 2026

“காதல் இல்லாமல் அனைத்தும் அர்த்தமற்றது” மீண்டும் சர்ச்சையை கிளப்பிய திரிஷாவின் பதிவு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் திரிஷா கிருஷ்ணன், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை நிலைநிறுத்தியுள்ளார். 

தனது நடிப்புத் திறமையாலும் அழகாலும் தொடர்ந்து முன்னணியில் நீடித்து வரும் இவர், திரைத்துறையைத் தாண்டியும் தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக அடிக்கடி பேசுபொருளாக மாறுவது வழக்கம்.

தற்போது, சூர்யாவுடன் இணைந்து ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்துவரும் திரிஷா, 42 வயதானாலும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஒரு சில சர்ச்சைகள் எழுவதற்கு வழிவகுத்துள்ளது. 


சமீபத்தில் விஜய்யுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பல்வேறு கருத்துக்களை கிளப்பியது.

அதோடு, ஒரு சிலநாட்களுக்கு முன்பு தனது வளர்ப்பு நாயை கோயிலுக்கு அழைத்துச் சென்று எடுத்த புகைப்படங்களை திரிஷா பகிர்ந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக சிலர் விமர்சனங்களையும் முன்வைத்தனர்.

இந்நிலையில், காதல் குறித்து திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த பதிவு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. அதில் அவர் “காதல் மட்டுமே எல்லாம் அல்ல, ஆனால் காதல் இல்லாமல் அனைத்தும் அர்த்தமற்றது” என்று பதிவிட்டுள்ளார். தற்போது அவரது கருத்து, ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement