• Jan 19 2025

ஊழலை எதிர்த்து கேள்வி கேட்டு பல்ப்பு வாங்கிய அனிதா சம்பத் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர் மற்றும் தமிழ் திரையுலகின் குணசித்திர நடிகையுமான அனிதா சம்பத் தமிழின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான "பிக் பாஸ்" நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்ததுடன் தனக்கான ஓர் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.


தற்போது பிஸியாக படங்களில் நடித்து வரும் அனிதா சம்பத் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ளார்.அனிதா சம்பத் சற்று முன்னர் தனது இன்ஸ்டா பக்கத்தில் குளம் ஒன்றின் மறு சீரமைப்பு பற்றிய அறிவிப்பு கல்வெட்டு ஒன்றை வாசித்து காட்டி சிறு படிக்கட்டுக்கான செலவு 11 இலட்ச்சமா ? 12 இலட்ச்சத்தில் முழு வீடே கட்டலாமே ! என கேள்வி எழுப்பி ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார்.


குறித்த வீடியோவிற்கு கமெண்ட் மூலம் பதிலளித்திருக்கும் நெட்டிசன்கள் "அக்காவுக்கு சற்று தெளிவு தேவை பொதுமக்கள் போல் ஒரு ஊடகவியலாளர் பேசுவது அழகல்ல. நாடைபாதை, படிக்கட்டு என அதில் தெளிவாக குறிப்பிடபட்டுள்ளது நீங்கள் படிக்கட்டை மட்டும் காட்டிவிட்டு நடைபாதையை காட்டாமல் விட்டுள்ளீர்கள் ., நீங்கள் நின்று வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் interlocking கல் போடப்பட்ட நடைபாதையும் அதில் அடங்கும்" என குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement