• Dec 04 2024

குரைக்கும் Dogs- க்கு இதுதான் பதிலடி.? A.R ரகுமான் பற்றி பேசிய பிக் பாஸ் பிரபலம்! வீடியோ

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்ட இசையமைப்பாளராக காணப்படுபவர் தான் ஏ. ஆர் ரகுமான். இவர் அமைக்கும் இசைக்கு மிகப்பெரிய மவுஸ் காணப்படுகின்றது. இதனால் இவரை இசைப்  புயல் ஏ. ஆர் ரகுமான் என ரசிகர்கள் அழைத்து வருகின்றார்கள்.

தமிழ் சினிமாவுக்கு ரோஜா படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஏ. ஆர் ரகுமான். அதற்கு முதல் தனக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பலரின் வாசக் கதவை தட்டி பல கஷ்டங்களை அனுபவித்ததாக அவர் கடந்து வந்த பாதை பற்றியும் பலபேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

ரோஜா படத்தில் ஏ. ஆர் ரகுமானுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அவர் இசையமைத்த அத்தனை பாட்டுகளும் சூப்பர் ஹிட் ஆகின. இன்றளவு மட்டும் இந்த பாடல்கள் ரசிக்கும் ரசிகர்கள் ஏராளம். இதைத்தொடர்ந்து ஏ. ஆர் ரகுமான் அமைக்கும் ஒவ்வொரு இசைக்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு பெருகியது.

d_i_a

இதைத்தொடர்ந்து தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பலமொழிகளிலும் தனது இசையை பரவ விட்டார். அத்துடன் ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றார். மேலும் பல விருதுகள் இவருக்கு சொந்தமானது. ஏ. ஆர் ரகுமான் வந்த பிறகு பல இசையமைப்பாளர்கள் தமது திறமை மூலம் ஈஸியாக வெளி உலகத்திற்கு வந்தனர்.


இவ்வாறு சிறப்பாக சென்ற ஏ. ஆர் ரகுமான் வாழ்க்கையில் திடீரென புயல் வீச ஆரம்பித்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட 29 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த ஏ. ஆர் ரகுமானது மனைவி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ஏ. ஆர் ரகுமானை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தார். அதன் பின்பு இந்த முடிவு பற்றி ஏ. ஆர் ரகுமானும் உறுதி செய்திருந்தார். இதைத் தொடர்ந்து பல சர்ச்சையான பதிவுகள் இணையத்தில் உலா வரத் தொடங்கின.


இந்த நிலையில், இலங்கையைச் சேர்ந்த பிரபல ராப் பாடகரும் பிக் பாஸ் பிரபலமும் ஆன ADK ஏ. ஆர் ரகுமான் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறுகையில், ஏ. ஆர் ரகுமான் பற்றி எங்களுக்கு தெரியும். அவர் சிறந்த ஆசான். பலரும் வியூஸ் வேண்டும் என்பதற்காகவும் பணம் சம்பாதிப்பதற்காகவும் பலவாறு பேசுகின்றார்கள். அதை நம்பி யாரும் பேச வேண்டாம் என்று மிகவும் உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மேலும் அதன் இறுதியில் வதந்திகளை பரப்பும் நாய்களுக்கு உரிய வீடியோ இது என்று அவர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார். தற்போது அவருடைய வீடியோ வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement