• Jan 19 2025

சாச்சனா வெளிய போற நேரம் வந்தாச்சு..! அசிங்கப்பட்டு கதறியழுத சௌந்தர்யா

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 50 நாட்களை எட்ட உள்ளது. 100 நாட்களைக் கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும். கடந்த ஏழாவது  சீசன் ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு நாளுமே  ரசிகர்களை என்டர்டைன்மெண்ட் பண்ணும் வகையில் அல்டிமேட் ஆக இருந்தது.

எனினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது பாதி நாட்களை கடந்த போதிலும் இதில் போதிய அளவு என்டர்டைன்மெண்ட் இல்லை என ரசிகர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இதில் சௌந்தர்யா மட்டுமே ரசிகர்கள் கொண்டாடும் ஒரு போட்டியாளராக காணப்படுகின்றார்.

இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.

d_i_a

இதை தொடர்ந்து ஆறு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன் ஆகிய ஆறு  பேரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள். எனினும் இவர்களுள் ரவீந்தர், சுனிதா, ரியாகராஜன், அர்ணவ், தர்ஷா குப்தா ஆகியோர் எலிமினேட் ஆகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார்கள்.


இந்த நிலையில், இன்றைய நாளுக்கான நான்காவது பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சாச்சனா பேசிய பேச்சால் சௌந்தர்யா புலம்பி அழுத வீடியோ வைரலாகியுள்ளது.

அதன்படி சாச்சனா கூறுகையில், டேலண்ட் ஷோ ஒன்று நடந்துச்சு தெரியுமா? அதுல நீங்க அழுதது கூட சிரிப்பா இருந்துச்சு என்று சொல்லுகின்றார். அதுல உங்க ரியாக்ஷனை பார்க்க முடியல. நீங்க அழுதா கூட சிரிப்பு தான் வருது என்று சக போட்டியாளர்கள் முன்பு சௌந்தர்யாவை  அசிங்கப்படுத்தி பேசி இருந்தார்.

இதை கேட்ட சௌந்தர்யா தனியாக சென்று கடிதம் ஒன்றை எழுதியதோடு அழுது புலம்புகிறார். அவருக்கு ஜாக்குலின் ஆறுதல் சொல்லுகின்றார். மேலும் சின்ன பொண்ணு மனசுல இப்படி இருக்குது என்று  சொல்லுகின்றார். இதுதான் இறுதியாக வெளியான ப்ரோமோ. இதை பார்த்த ரசிகர்கள் இந்த வாரம் சாச்சனா வெளியே போவது உறுதி என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement