• Jan 16 2026

பிறந்தநாள் கொண்டாடும் பவித்ரா..! வாழ்த்து கூறி வரும் பிக்போஸ் பிரபலங்கள்..?

Mathumitha / 11 months ago

Advertisement

Listen News!

மிகவும் சுவாரஸ்யங்கள் நிறைந்த ஒரு ரியாலிட்டி ஷோவான பிக்போஸ் நிகழ்ச்சியின் 8 ஆவது சீசன் சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.இந்த சீசனில் முத்துக்குமரன் ,சவுந்தர்யா ,பவித்ரா ஜனனி ,ஜாக்குலின் ,விஷால் ,தீபக், அருண் ,சத்யா ,ரவீந்திரன் ,தர்ஷிகா ,தர்ஷா குப்தா,ஜேப்பிரி ,சாச்சனா ,ரஞ்சித்,அன்ஷிதா,சுனிதா  ஆகியோர் ஆரம்பத்திலும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக ரானவ்,ரயான் ,மஞ்சரி,சிவகுமார் ,வர்ஷினி ,தியா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.


இந்த நிகழ்ச்சியின் பின்னர் போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் ஒற்றுமையுடனும் ஒன்றாக இணைந்தும் பல இடங்களிற்கு சென்று வைப் பண்ணி வருகின்றனர்.ஒரு சிலர் சோஷியல் மீடியாக்களில் நேர்காணலில் வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து வருகின்றனர்.


நாளுக்கு நாள் இவர்கள் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி வரும் நிலையில் இன்றைய தினம் top 5 போட்டியாளர் ஆன பவித்ரா தனது பிறந்தநாளினை கொண்டாடியுள்ளார்.இவரது பிறந்த நாளிற்கு பலர் வாழ்த்து கூறியுள்ளதுடன் தர்ஷிகா ,அன்ஷிதா ,சுனிதா ,ஜாக்குலின் ,தீபக் ,சிவகுமார் ஆகியோர் வாழ்த்து கூறியுள்ளனர்.


இவரது சீரியல் நடிகர்கள் சிலரும் வாழ்த்து கூறியுள்ளதுடன் தர்ஷிகா ஒரு friend ship வீடியோ ஒன்றினையும் பதிவிட்டு வாழ்த்தியுள்ளதுடன் ஜெப்பிரி அக்கா என கூறி வாழ்த்தியுள்ளார்.இதற்கு பவித்ரா "அக்காவா புதுசா இருக்கே என்ன ஒரு மரியாதை " என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement