• Feb 08 2023

டூப் போடாமல் ஃபைட் சீனில் பட்டையை கிளப்பிய பிக்பாஸ் நடிகை...அடுத்தடுத்து வெளியாகும் சூப்பர் அப்டேட்..!

Listen News!
Aishu / 1 month ago
image

Advertisement

Listen News!

திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் குறிப்பிடத்தக்கவர் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற அவர், இப்போது 'நான் கடவுள் இல்லை 'என்கிற படத்தில் சிபிசிஐடி அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.  இதேபோல், விவேக் பிரசன்னா - சாக்‌ஷி அகர்வால் இணைந்து நடிக்கும் 'பொய்யின்றி அமையாது உலகு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டத்தை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

செல்போனை மையப்படுத்தி தயாராகியிருக்கும் 'பொய்யின்றி அமையாது உலகு' படத்தில் நடிகர் விவேக் பிரசன்னா - நடிகை சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடிக்கின்றனர். இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, டேனியல் ஆனி போப், அர்ஜுனன், பிரவீண் நடிகைகள் சாக்‌ஷி அகர்வால்,ஸ்வயம்சித்தா, சஹானா, ஜமுனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசைப்பேட்டை' வசந்த் இசையமைத்திருக்கிறார். காமெடியுடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை தியா சினி கிரியேசன்ஸ் மற்றும் ரூல்ஸ் பிரேக்கர்ஸ் புரொடக்சன் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெகன் நாராயணன் மற்றும் சக்திவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.அத்தோடு  இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

இப் படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' நான்கு ஜோடிகள் கெட் டூ கெதர் சந்திப்பு ஒன்றில் சந்திக்கிறார்கள். இவர்கள் தங்களது செல்போனை வைத்துக்கொண்டு ஜாலியான விதிகளுடன் விளையாட தொடங்குகிறார்கள். அதாவது இந்த எட்டு பேரின் செல்போன்களுக்கு வரும் குறுஞ்செய்தியையும், அழைப்புகளையும் அனைவரும் அறிந்து கொள்ளும்படி வைத்திருக்க வேண்டும். இந்த நிபந்தனையுடன் நடைபெறும் அந்த விளையாட்டு, நகைச்சுவையாக தொடங்கி பல எதிர்பாராத சுவாரசியமான சம்பவங்களுடன் பயணிக்கிறது. இந்த ஆண்டில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ படத்தைத் தொடர்ந்து செல்போனை மையப்படுத்திய திரைக்கதை என்பதால், இதற்கு இளம் தலைமுறையினரிடத்தில் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். நகைச்சுவையுடன் கலந்த ஃபீல் குட் படைப்பாக 'பொய்யின்றி அமையாது உலகு' தயாராகி இருக்கிறது'' என்று கூறினார்.

இதேபோல், சமீபத்தில் சாக்ஷி அகர்வால் நடித்த ஒரு சண்டைக்காட்சி வடபழனியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் அதாவது ஜிம்மில் நடந்தது. சண்டைக் காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் வடிவமைத்து இயக்கினார்.அதில் சாக்ஷி அகர்வால் டூப் போடாமல் பல ரிஸ்க்கான காட்சிகளில்  நடித்ததைப் பார்த்து கனல் கண்ணன் பாராட்டி உள்ளார்.மேலும்  இந்தப் படத்தை முழுவதுமாக படப்பிடிப்பு முடித்துவிட்டு. நான்கு சண்டைக் காட்சிகள்  மட்டும்  எடுக்கப்படாமல் வைத்து கடைசியாகப்  படம்  ஆக்கி  உள்ளார்கள்.

மேலும் இந்தப் படத்தில் சமுத்திரகனியின் கதாபாத்திரம் ஒரு கம்பீரமான இதுவரை திரையில் பார்க்காத ஒரு கதாபாத்திரமாக இருக்கும். இன்னொரு இளம் நாயகனாக யுவன்  நடிக்கிறார்.  இந்தப் படத்தில் இனியா பாசமும் பரிதாபமும் கொண்ட  அழகான தாயாகவும். பருத்திவீரன் சரவணன் கொடூரமான கதாபாத்திரத்திலும்  நடித்துள்ளார். மற்றும் டயானா ஸ்ரீ என்கிற இளம் பெண், இமான் அண்ணாச்சி, ரோகிணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

பரபரப்பான படங்களுக்குப் பெயர் பெற்றவர் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் .'சட்டம் ஒரு இருட்டறை' படத்திலிருந்து தனது பரபரப்பைத் தொடங்கியவர் பல படங்களில் சட்டத்தை விளையாட வைத்தவர், இப்போது 'நான் கடவுள் இல்லை' படத்திலும் தொடர்கிறார் .அத்தோடு  இப்படத்தின் குரல் பதிவு வேலைகள் முடிந்து இறுதிக்கட்டமாகப் பின்னணி சேர்க்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படம் 2023 பிப்ரவரி மாதம் வெளியாகும்.

Advertisement

Advertisement

Advertisement