• Mar 26 2025

பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..! அதிர்ச்சியில் திரையுலகம்..

Mathumitha / 17 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் "தாஜ்மகால் " திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான மனோஜ் காலமானார். அவருக்கு வயது 48. இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த மனோஜ் தற்போது உயிரிழந்துள்ளார். பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் அந்த படத்தால் பெரும் புகழ் பெற்றார். 


பிறகு கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தார். சமுத்திரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.


பின்னர் திடீரென நடிப்புத்துறையிலிருந்து விலகிய மனோஜ் தன் தந்தை பாரதி ராஜா இயக்கத்தில் அன்னகொடி படத்தில் கதாநாயகனாக மீண்டும் திரும்பினார் ஆனால் அந்த படம் அதிக வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு சில படங்களில் மட்டும் அவ்வப்போது நடித்து வந்த மனோஜ் 2021 ஆம் ஆண்டில் மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 2022 ஆம் ஆண்டில் விருமன் படத்தில் அவரது கதாபாத்திரம் நல்ல கவனத்தை பெற்றது.


மேலும் அவரது பூதவுடல் நாளை அவரது வீட்டில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement