• Jan 20 2025

ஜான்வி கபூருக்கு போனை தூக்கி வீசிய பேன்ஸ்.. தீயாய் பரவும் வீடியோ!

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக காணப்படும் ஜான்வி கபூர் தற்போது தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க  கமிட்டாகி உள்ளார். இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மூத்த மகளாக காணப்படுபவர் தான் ஜான்வி கபூர். இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தில் பாலிவுட் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.


இந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக காணப்படும் ஜான்வி, தற்போது தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதிலும் தற்போது  சிம்பு நடிக்கும் STR 48 படத்தில் நடிப்பதற்கு அவருடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் நடிகை ஜான்வி மற்றும்  Orry Awatraman மீது ரசிகர்கள் போனை தூக்கி எறிந்துள்ளார்கள். அதாவது புகைப்படம் பிடித்து தருமாறு மேலே இருக்கும் ஜான்வியிடம் போனை தூக்கி ரசிகர்கள் எறிந்துள்ள காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாக உள்ளது. இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement