• Jan 20 2025

சுசித்ராவின் கனவு பலித்தது.... தனுஷ் அந்த விஷயத்தில் வீக்.. ! பிரபல தயாரிப்பாளர் பகிர்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்சகட்ட பிரபல நடிகராக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா முக்கியமானவர்களாக காணப்படுகிறார்கள். ஐஸ்வர்யா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். ஆனாலும் தற்போது இவர்களுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்கள்.

இதைத் தொடர்ந்து அண்மையில் பாடகி சுசித்ரா தமிழ்த் திரை உலகுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நடிகர் தனுஷ் உட்பட ஐஸ்வர்யா, திரிஷா, அனிருத், கமலஹாசன், விஜய், ஷாருக்கான் என அனைவரையும் வெளுத்து வாங்கி இருந்தார். அவர் வழங்கிய பேட்டியில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது. அவரது முன்னாள் கணவருக்கும் தனுசுக்கும் நெருங்கிய உறவு இருப்பதாகவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் தயாரிப்பாளர் கே. ராஜன்யூடுயூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு தகவல்களை முன் வைத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,


பாடகி சுசித்ராவை இதுக்கு முதல் யாருக்காவது தெரியுமா? அவரை இன்றைக்கு அனைவருக்கும் தெரிந்தது என்றால் அவர் அளித்த பேட்டி மூலம் தான். அவருக்கு இந்த பெயர் வர வேண்டும் அப்படியாவது பிரபலமாக வேண்டும் என்பதற்காக தான் இவ்வாறு பேட்டி கொடுத்தார். அதில் பல நடிகர், நடிகைகளை பற்றி பேசியுள்ளார். அவர்களைப் பற்றி தெரியும் என்றால் அவரும் அனைவரிடமும் பழகிருக்க வேண்டும். அதனால் தான் அவர்கள் பற்றி நன்றாக பேசுகின்றார் .

அதிலும் குறிப்பாக தனுசுடன் ஸ்பெஷலாக பழகியுள்ளார். தனுஷ் அனைவருடனும் நன்றாக பழகக் கூடியவர். அவரது வாழ்க்கையில்  ஏற்பட விரிசலுக்கு அதுதான் காரணம். சுசித்ரா இப்படி சொல்வதால் தனுஷ் அந்த விஷயத்தில் வீக் ஆனவராக இருப்பார் என்று தோன்றுகிறது.


மேலும் கமலஹாசன் சர்ச்சைக்குரிய விருந்து கொடுத்ததாகவும் அதில் பல நடிகர்கள் கலந்து கொண்டதாகவும் இதுவரை யாரும் சொல்லாத தகவலை சொல்லி இருக்கின்றார் என்றால், அவரும் அந்த விருந்தில் கலந்து கொண்டார் என்பதுதான் அர்த்தம்.

இவ்வாறு ஒரு சில விஷயங்களை சொல்லி அதன் மூலம் புகழ்பெற வேண்டும் என்று நினைத்துள்ளார் சுசித்ரா. அவரது கனவு பலித்து விட்டது. அனைத்து மீடியாக்களும் அவரின் பெயரை தான் சொல்லுகிறது. இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Advertisement

Advertisement