• Jan 19 2025

அந்த திருட்டு கிரிமினல் தலையில நாலு போடுங்க முத்து! பாவமாய் தவிக்கும் மீனா! சத்யா கொடுத்த அதிர்ச்சி

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், என்னுடைய விஷயத்தில் தலையிடுர வேலை எல்லாம் வச்சிருக்காதைங்க, அதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று முத்துவை சத்யா அவமானப்படுத்த, முத்து அங்கிருந்து வெளியேறுகிறார்.

இது தொடர்ந்து செட்டுக்கு வந்த முத்து, அங்கிருந்த சரக்கை எடுத்து குடித்துவிட்டு சத்யா அவமானப்படுத்தி பேசியதை பற்றி செல்வத்திடம் சொல்லுகிறார்.

மேலும் நான் டிரைவர் தான், என்னால என் பொண்டாட்டிக்கு எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்றான். நேர்மையா இருக்கிறது  தப்பா? இதெல்லாம் மீனாக்கு தெரிஞ்சா எப்படி தாங்குவா என்றும் முத்து புலம்புகிறார்.

அதன் பிறகு ஹாஸ்பிடல் ஸ்கேன் ரிப்போர்ட் வந்தவுடன், கையில் எலும்பு முறிந்திருப்பதாகவும் உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் எனவும் சொல்லுகிறார்கள்.


இதையடுத்து, டாக்டர் சொன்ன விஷயத்தை அங்கு வந்த மீனாவிடம் சொல்லி, 30 ஆயிரம் பணம் கட்ட வேண்டும் எனவும் சீதாவின் அம்மா அழுது புலம்புகிறார்.

எனினும், 18 ஆயிரம் பணம் வரையில் புரட்டிய மீனா, மிச்ச பணத்துக்கு என்ன செய்வது என முத்துக்கு ஃபோன் போட முத்து போன் எடுக்க மறுக்கிறார். அதன்பின் தெரிந்தவர்கள் எல்லாருக்கும்  போன் போட்டு கேட்க, யாரும் கொடுக்க முன்வரவில்லை.

அந்த நேரத்தில், ஹாஸ்பிடலில் இருந்தவர்கள் அங்கு ஒரு டாக்டர் இருக்கார், ரொம்ப நல்லவர்,  ஏழைக்கு ரொம்ப கம்மியா சிகிச்சை கொடுக்கிறார், நீங்க ஒருக்கா டாக்டர்ர போய் பாருங்க என சொல்லி அனுப்ப, மீனாவும் டாக்டரிடம் போய் உதவி கேட்டு கொஞ்சம் கொஞ்சமா பணம் கட்டுற மாதிரி ஏற்பாடு செய்து கொள்கிறார்.

இதன் போது டாக்டர், இது பைக்ல இருந்து விழுந்து அடிபட்ட காயங்கள் இல்லை. சண்டைல யாரோ கையை பிடித்து முறிச்சிருக்காங்க என்று சொல்ல, மீனா அதிர்ச்சி அடைகிறார்.

அதன் பிறகு ஆபரேஷன் முடிஞ்சு சத்யா நார்மல் வாட்டுக்கு கொண்டு வந்த பிறகு, சத்யாவை பார்க்க வந்த மீனா, உனக்கு எப்படி காயம் வந்தது? எங்க விழுந்த? யாருடைய பைக்?  பைக்குக்கு சொந்த காரனை வர சொல்லு என விசாரிக்கிறார்.

அதற்கு சத்யா திருதிருவென முழிக்கிறார். அதன் பிறகு மீனா உண்மையை சொல்லு என அடிக்க, இறுதியாக ஆமா நான் பைக்ல இருந்து கீழே விழல என்று சத்யா சொல்ல, எல்லோரும் ஷாக் ஆகின்றனர். இதுதான் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்.

Advertisement

Advertisement