• Sep 22 2023

மீண்டும் தன்னுடைய வீட்டுக்கு வந்த அமிர்தாவின் முதல் கணவர்- ஈஸ்வரியை நினைத்து ராமமூர்த்தியிடம் புலம்பும் பாக்கியா-Baakiyalakshmi Serial

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

இனியா எப்பிடியம்மா பயமில்லாமல் எங்களை கூட்டிட்டு வந்த என்று கேட்கும் போது பாக்கியா, பயமாத் தான் இருந்திச்சு, ஆனால் அதை விட உன்னுடைய ட்ரிப் முக்கியமாக இருந்திச்சு அதனால தான் கூட்டிட்டு வந்தேன் என்று சொல்கின்றார். அத்தோடு நன் எந்த விஷயமும் பண்ண மாட்டேன் என்று நினைக்கிற உங்க அப்பா முன்னாடி தான் எல்லாமே பண்ணணும் என்ற வைராக்கியம். என்னை மாதிரி நீயும் ஸ்ரோங்காக இருக்கனும் என்கின்றார்.


தொடர்ந்து அமிர்தாவின் மாமியார் தன்னுடைய மகன் இறந்த நினைவு நாள் என்பதால் அழுது அழுது சமைக்கின்றார். என் பையன் எங்களோடையே இருந்து வாழுவது எனக்கு கொடுத்து வைக்கலையே என்று அழுகின்றார். மறுபுறம் விடிந்ததும் பாக்கியா இனியாவை ஒரு இடத்திற்கு கூட்டிட்டு போவதாக சொல்ல முதலில் மறுப்புத் தெரிவித்த ஈஸ்வரி பின்னர் ஓகே சொல்கின்றார்.

அத்தோடு பாக்கியா போன் பண்ணி ராமமூர்த்தியிடம் பேசுகின்றார். ராமமூர்ததியிடம் நடந்த விஷயங்களை எல்லொம் சொன்னதோடு ஈஸ்வரி எதுக்கெடுத்தாலும் பயந்து கொண்டு இருக்கிறார் என்றும் சொல்கின்றார்.அப்போது ராமமூர்த்தி பாக்கியாவை சமாதானப்படுத்துகின்றார். பின்கர் சாப்பிடும் போது அமிர்தாவை விசாரிக்கின்றார் ராமமூர்த்தி.


அப்போது எழில் இன்று அமிர்தாவின் மூத்த கணவரின் நினைவு நாள் என்று சொல்கின்றார். இதைக் கேட்ட ராம மூர்த்தி கவலைப்படாதம்மா, எழில் உன்னை நல்லாப் பார்த்துப்பான் என்று ஆறுதல்படுத்த எழில் நிலாவுக்கு சாப்பாடு ஊட்டுகின்றார். இதைப் பார்த்து அமிர்தா சந்தோஷப்படுகின்றார். தொடர்ந்து அமிர்தாவின் மாமியாரும் மாமனாரும் அழுது கொண்டே மகனுக்கு படையல் போடுகின்றனர்.


அப்போது யாரேத ஒருவர் கதவைத் தட்டுகின்றார் என மாமியார் திறந்து  பார்க்க அங்கே அவர்களுடைய மகனான கணேஷ் வந்து நிற்கின்றார். இதைப்  பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்ததோடு பின்னர் மகனைக் கட்டிப் பிடித்து அழுகின்றனர். அப்போது கணேஷ் அமிர்தா எங்கே என்று தேடுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement