சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ப்ரியங்கா நல்காரி. இந்த சீரியலில் ரோஜா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டார். 5வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் மாபெரும் வெற்றி கண்டது.
தொடர்ந்து ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீதா ராமன் என்னும் சீரியலில் நடித்து வந்தார். RP ரேட்டிங்குடன் நல்ல சீதா ராமன் சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் திடீர் திருமணம் செய்து கொண்ட ப்ரியங்கா தனது கணவருடன் நேரத்தை செலவிடுவதற்காக இந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.
இதனால் இவர் எப்போது மீண்டும் சீரியலில் நடிக்க வருவார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.இந்த நிலையில் தற்போது ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு ப்ரியங்கா நல்காரி நளதமயந்தி என்னும் சீரியல் மூலமே என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!