• Sep 21 2024

அட்லீ படத்தை பிரம்மாண்ட தொகைக்கு வாங்கிய முன்னணி நிறுவனம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் டாப் இயக்குநராக விளங்குபவர் தான் இயக்குநர் அட்லீ, இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.

இவர் பிகில் படத்திற்கு பின்னர் மூன்று வருடம் இடைவெளிக்கு பின் தற்போது ஷாருக் கான் நடிப்பில் ஜவான் என்ற ஹிந்தி படத்தை இயக்கி வருகிறார். அந்த படம் தென்னிந்திய மொழிகளிலும் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

மேலும் இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அத்தோடு பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கெஸ்ட் ரோலில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ஜவான் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஒரு பிரம்மாண்ட தொகைக்கு வாங்கி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

அத்தோடு ஷூட்டிங் கூட முடியாத நிலையில் தற்போதே வியாபாரம் தொடங்கி இருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement