• May 11 2024

அஜித் சொல்லி சூப்பர் ஹிட் படத்தை நடித்த பிரபல நடிகர்-அட இவரா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவராகத் திகழ்பவர் நடிகர் ஜெய்.இவர் தனது 16-ஆவது வயதில் “பகவதி” என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு தம்பியாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்து அதன் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து “கோவா, வாமனன், எங்கேயும் எப்போதும், வடகறி, மற்றும் திருமணம் எனும் நிக்காஹ்” போன்ற பல படங்களில் நடித்திருக்கின்றார். கதாநாயகனாக மட்டுமல்லாது தற்போது இவர் வில்லனாகவும் நடிக்கத் தொடங்கி விட்டார். அதாவது சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் “பட்டாம்பூச்சி ” என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் கொலைகார சைக்கோவாக, வில்லனாக நடிகர் ஜெய் புதியதொரு அவதாரம் எடுத்து இருக்கின்றார்.

இவர் நடிப்பில் கடந்த வாரம் பட்டாம்பூச்சி என்ற படம் திரைக்கு வந்தது.

மேலும் இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஜெய்யின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜெய் சமீபத்தில் ஒரு பேட்டியில், ஆரம்பத்தில் தான் எந்த படத்தை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் இருந்தேன்.

அப்போது அஜித் சார் தான் சுப்ரமணியபுரம் படத்தை தேர்ந்தெடுத்தார், இதில் நடி என்று அவர் தான் சொன்னார்.

படமும் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது என ஜெய் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement