தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களுள் ஒருவராக திகழ்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கமலஹாசன், விஜய், சூர்யா, கார்த்தி என பிரபல நட்சத்திரங்களின் வரிசையில் தற்போது ரஜினிகாந்தும் இணைந்துள்ளார்.
அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடித்த கைதி திரைப்படம், அதை தொடர்ந்து விஜய் நடிப்பில் லியோ, கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம், லியோ படத்தின் கேமியா ரோலில் சூர்யாவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருந்தார். தற்காலத்தில் ரசிகர்கள் விரும்பும் வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்கள் காணப்படுவதால் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் தற்போது ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகின்றார் லோகேஷ் கனகராஜ். இது தொடர்பில் அண்மையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதன் பின்பு ஒரு சில அப்டேட்டுகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தல பக்கத்தில் ஒளிப்பதிப்வாளர் கிரிஷ் கங்காதரனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கூலி படத்தின் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
மேலும் கூலி படத்தின் படப்பிடிப்புகள் இந்த மாதம் ஆரம்பிக்கப்படும் என அறிவித்த நிலையில், இதில் நடிக்க உள்ள நடிகர்கள் பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என படத் தயாரிப்பாளர் தெரிவித்து இருந்தார்.
இதேவேளை மிஸ்டர் பாரத் படத்திற்கு பிறகு சுமார் 38 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் சத்யராஜ் இந்த படத்தில் இணைய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!