• Jan 26 2026

அஜித்துடன் மீண்டும் நடிக்க ஆசை.. ஏன் தெரியுமா.? மனம் திறந்த அருண் விஜய்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வரும் நடிகர் அருண் விஜய், தற்போது தனது புதிய திரைப்படமான ‘ரெட்ட தல’ மூலம் மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராக உள்ளார். கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், வருகின்ற 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


ரெட்ட தல திரைப்படத்தில் அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படம், ஆக்‌ஷன் மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் ப்ரோமோஷன் வீடியோக்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படக்குழு முழுவீச்சில் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


ரெட்ட தல ப்ரோமோஷன் விழாவில் பேசிய நடிகர் அருண் விஜய், தனது புதிய படம் குறித்து மட்டுமல்லாமல், நடிகர் விஜய் மற்றும் அஜித் குறித்து மனம் திறந்து பேசினார். அவரது பேச்சு ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றது.

அருண் விஜய் அதன்போது,“தளபதியின் ‘ஜனநாயகன்’ படத்திற்காக Waiting. அது விஜயின் கடைசி படம் என்றால், அதை ஏற்றுக்கொள்வது எனக்கே கஷ்டமாக இருக்கிறது. என்றைக்கும் அவருக்கு நம்முடைய Support இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

அருண் விஜயின் இந்த கருத்து, விஜய் ரசிகர்களிடையே பெரும் உணர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கிடையேயான பரஸ்பர மரியாதையை இது வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, “நடிகர் அஜித்தின் Confidence ரொம்ப பிடிக்கும். சரியான வாய்ப்பு கிடைத்தால், மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன்,” என்றும் அவர் கூறினார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றன. 

Advertisement

Advertisement