• Jun 16 2024

பிரபல காமெடி நடிகரின் மகனை திருமணம் செய்யவுள்ள அர்ஜுனின் மகள்- அடடே இந்த நடிகரைத் தான் காதலிக்கின்றாரா?

stella / 11 months ago

Advertisement

Listen News!


தமிழ் ரசிகர்களால் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் தான் அர்ஜுன். ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்து வந்த இவர் தற்பொழுது வில்லன் கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் வில்லனாக நடித்து வரும் திரைப்படங்கள் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றும் வருகின்றன.

இந்த நிலையில் தற்பொழுது  விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா, விஷால் நடிப்பில் 2013 -ம் ஆண்டு வெளியான பட்டது யானை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். 


ஆனால் இப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை.இந்நிலையில் தம்பி ராமையா மகன் உமாபதியை ஐஸ்வர்யா நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்களாம். இவர்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.    


ஆனால் இது குறித்த எந்த சரியான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அத்தோடு உமாபதி ஷு தமிழில் ஒளிபரப்பாகிய சர்வைவர் நிகழ்ச்சியிலும் பங்குபற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement