• Jan 19 2025

நான் திருமணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டது வேறொருவரை.. அபிஷேக் ராஜாவின் புது மனைவி அதிர்ச்சி பேட்டி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நான் திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டது வேறொருவரை, ஆனால் வேறு வழி இல்லாமல் அபிஷேக் ராஜாவை திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் அபிஷேக் ராஜாவின் புதுமனைவி சுவாதி பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

யூடியூப் விமர்சகர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் அபிஷேக் ராஜா கடந்த 2017 ஆம் ஆண்டு தீபா நடராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் ஆன சில ஆண்டுகளில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் சுவாதி நாகராஜன் என்பவரை அபிஷேக் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகின.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் அபிஷேக் மற்றும் சுவாதி ஆகிய இருவரும் சேர்ந்து பேட்டி அளித்து வரும் நிலையில் ஒரு பேட்டியில் சுவாதி திடீரென ’நான் அபிஷேக் ராஜாவை திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பவில்லை என்றும், எனக்கு சிவபெருமானை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் என்றும், சின்ன வயதில் என் பாட்டி சிவபெருமான் கதையை கூறிய போது அவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் அபிஷேக் ராஜா என்னுடன் பழகிய போது ’நான் தான் சிவன் என்றும், என்னுடைய உண்மையான பெயர் சிவராமகிருஷ்ண சுப்பிரமணி என்று கூறிய பின்னர் தான் அவரை நான் திருமணம் செய்ய சம்மதித்தேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

அபிஷேக் ராஜா தான் ஓவராக பேசுவார், உருட்டுவார் என்று பார்த்தால், அவருடைய மனைவி அதைவிட கிரிஞ்சா பேசுறாங்களே என்று ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அபிஷேக் ராஜா ’ஜாம் ஜாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement