• Jun 23 2024

ஒரு மாதம் கூட ஆகவில்லை.. குழந்தையுடன் க்யூட் போட்டோஷூட்.. ஸ்ரீதேவி அசோக்கின் இன்ஸ்டா பதிவு..!

Sivalingam / 6 days ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் அவர்களுக்கு கடந்த மே மாதம் 27ஆம் தேதி குழந்தை பிறந்த நிலையில் ஒரு மாதம் கூட ஆகாத குழந்தையுடன் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தனுஷ் நடித்த ’புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’ ஸ்ரீகாந்த் நடித்த ’கிழக்கு கடற்கரை சாலை’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். அதன் பிறகு அவர் ’செல்லமடி நீ எனக்கு’ என்ற சன் டிவி சீரியலில் அறிமுகமாகி ’கஸ்தூரி’ ’இளவரசி’ ’தங்கம்’ உள்பட பல சீரியல்களில் நடித்தார்.

மேலும் ’மாநாடு மயிலாட’ உட்பட சில ரியாலிட்டி ஷோக்களில் அவர் கலந்து கொண்ட நிலையில் தற்போது கூட அவர் ’மோதலும் காதலும்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி அசோக், அசோகா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த மே மாதம் 27ஆம் தேதி இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீதேவி அசோக் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத இந்த குழந்தையின் போட்டோஷூட் புகைப்படங்களை ஸ்ரீதேவி அசோக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த பதிவில் அவர், ‘பிறந்த குழந்தையை முதன் முதலில் பார்த்தபோது ஆனந்த கண்ணீர் வந்தது என்றும் அடுத்த இரண்டு வாரங்களில் அந்த குழந்தையை அடுத்தடுத்து பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் பெரும்பாலும் குழந்தை தூங்கிக் கொண்டிருப்பதையும் பார்த்து நாங்கள் ரசித்து வருகிறோம் என்றும் பதிவு செய்துள்ளார்.  

இந்த க்யூட் பதிவு மற்றும் புகைப்படங்களுக்கு ஏராளமான லைக் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.


Advertisement

Advertisement