• Jun 21 2024

லால் சலாம் கொடுத்த எனர்ஜி..? SK23 வது படத்தில் இணைந்த விக்ராந்த்.. சிறப்பு போஸ்டர்

Aathira / 5 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது வெளியாகும் திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. இறுதியாக வெளியான அயலான் திரைப்படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாஸ் காட்டியிருந்தது.

தற்போது கமலஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்  சிவகார்த்திகேயன். இந்தப் படம் செப்டம்பர் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றார். இந்த படத்தில் நாயகியாக கன்னட நடிகை ருக்மணி வசந்தா நடிக்கின்றார்.

மேலும் 23 படத்தின் வில்லனாக துப்பாக்கி படத்தில் நடித்த வித்யூட் ஜம்வால் இணைந்துள்ளார். மேலும் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவரும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.


இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின்  23 வது படத்தில் நடிகர் விக்ராந்த் இணைந்துள்ளார். இதனை சிறப்பு போஸ்டர் மூலம் வெளியிட்டு உள்ளார்கள்.

இதனை பார்த்த ரசிகர்கள் லால் சலாம் படத்தில் விக்ராந்த் நடித்துள்ள நிலையில், அதில் கிடைத்த எனர்ஜி தான் தற்போது சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்துள்ளார் என கமெண்ட் பண்ணியதோடு அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement