• Jun 21 2024

எதிர்நீச்சலில் நடித்தது மிகப்பெரிய அவமானம்.. மனம் திறந்த வேல ராமமூர்த்தி

Aathira / 5 days ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களுள் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியல் ஆரம்பத்தில் டிஆர்பி ரேட்டிங்கிலும் முதலிடத்தில் வகித்து வந்தது. அதற்கு முக்கிய காரணம் அதில்  நடித்த மாரிமுத்து தான்.

எதிர்நீச்சல் சீரியலில் இடம்பெறும் குணசேகரன் கேரக்டரில் நடித்தவர் தான் மாரிமுத்து. இவர் பேசிய வசனங்கள் சீரியலில்  மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் வைரலானது. இதனால் இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக சென்றது.

எனினும் எதிர்பாராத விதமாக மாரிமுத்து மாரடைப்பில் இறந்து விட இந்த சீரியலும் சரிவை சந்தித்தது. அதற்கு பின் குணசேகரன் கேரக்டரில் நடிப்பதற்கு வேல ராமமூர்த்தி ஒப்பந்தமானார். ஆனாலும் இவரை ஏற்றுக் கொள்வதற்கு ரசிகர்களுக்கு சில காலம் எடுத்தது..


இந்த நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வேலராமமூர்த்தி எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி   உச்சத்தில் இருந்தது. இந்த சீரியலுக்கான ரசிகர் பட்டாளமே பெருமளவில் இருக்கின்றது. இதன் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருந்தது.

ஆனால் இந்த சீரியலில் நான் ஏன் நடித்தேன் என்றுதான் இருந்தது. இதனை மிகப்பெரிய அவமானமாகவே நான் பார்த்தேன். அதற்கு காரணம் ரசிகர்களுக்கு என்னை பிடிக்கவே இல்லை என்று வேலராம மூர்த்தி கூறியுள்ளார்.

Advertisement

Advertisement