விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 10’ நிகழ்ச்சி விரைவில் தொடங்கவுள்ள நிலையில், போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாகக் கூறப்படும் ஆண் போட்டியாளர்களின் பட்டியல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதன்படி, சின்னத்திரை நடிகர் நவீன் குமார், ஆர்யன், வினோத் பாபு, புவியரசு, பார்கவ் ராம் உள்ளிட்டோர் இந்த சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களுடன் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் ராஜ்பிரியன் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

மேலும், நடன இயக்குநரும் நடனக் கலைஞருமான ஸ்ரீதர் மற்றும் திரைப்பட விமர்சகர் பிரசாந்த் ஆகியோரும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், போட்டியாளர்கள் குறித்த இந்த பட்டியல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த சீசன்களைப் போலவே இந்த முறையும் சினிமா, சின்னத்திரை மற்றும் சமூக வலைத்தளங்களைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்துகொள்ள இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!