தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் மலையாள நடிகையாக இருந்த போதும் இவருக்கு தமிழில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது 40 வயதை கடந்த நயன்தாரா இன்றளவில் மட்டும் ஹீரோயின் கேரக்டரில் நடித்து வருகின்றார்.
தமிழில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நயன்தாரா. முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைய இரண்டாவதாக சூப்பர் ஸ்டாருடன் சந்திரமுகி படத்தில் இணைந்தார். அந்தப் படமும் சூப்பர் ஹிட் அடித்தது.
இதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, சூப்பர் ஸ்டார் என பலருடனும் ஜோடியாக நடித்தார். தமிழ் சினிமாவுக்கு பல வெற்றி படங்களை கொடுத்த நடிகைகளுள் முக்கியமானவராக நயன்தாரா காணப்படுகின்றார்.
d_i_a
நயன்தாரா பல காதல் சிக்கல்களில் சிக்கிய போதும் இறுதியாக நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும் போது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார். இவர்களுடைய காதல் கிட்டத்தட்ட 8 வருடங்கள் நீடித்த நிலையில் இறுதியாக 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.
அதன் பின்பு வாடகை தாய் மூலம் நயன்தாரா ரெட்டை குழந்தைகளுக்கு தாயானார். உயிர் - உலக் என அவர்களுக்கு வித்தியாசமான பெயர்களையும் வைத்தார்கள். தற்போது நயன்தாரா படப் பிடிப்பிற்கு செல்லும் இடமெல்லாம் தனது குடும்பத்தையும் அழைத்துக் கொண்டுதான் செல்லுகிறார்.
இந்த நிலையில், நயன்தாராவின் குழந்தைகள் அவர் நடித்த நானும் ரவுடிதான் படத்தில் இருந்த பாடல் ஒன்றை பாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை விக்கி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? இப்பவே நயன் குழந்தைகள் சிங்கராக மாறிவிட்டார்களே என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.
Listen News!