• Jan 19 2025

பிக் பாஸ் கேமராவில் சிக்கிய அர்ச்சனாவின் உண்மை முகம்! Rj Bravo இடையில் இப்படியொரு DEAL இருக்கா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திருப்பு முனையோடு நடைபெற்று வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்பொழுது சிறப்பான முறையில் முடிவுக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

கடந்த சீசன்களில் இல்லாத வகையில் இந்த சீசன் முற்றிலும் மாறுபட்டு அமைந்திருக்கின்றது என்றே சொல்ல வேண்டும். எந்த சீசன்லையும் நடக்காத பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் இந்த சீசன்னில் நடைபெற்று பிக் பாஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது . 

இந்த விறுவிறுப்பான நிலையில், அர்ச்சனாவின் PR பிரச்சனை மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பிலான வீடியோ ட்டோல் செய்யப்பட்டு வருகின்றது.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயிச்சா 10 இலட்சம் டீல்லாக பேசப்பட்டுள்ளது என தகவல் கசிந்துள்ளது. மேலும், PR பற்றி ரவீனா ஒரு உண்மையை உடைச்சி இருக்காங்க . 

அதாவது, வெளியில் மக்கள் மனதை மாற்றி, மக்கள் வோட் ஐ  பெறுவது தான் வெளில வியாபாரமாக நடந்து கொண்டு இருக்கு. இதனால் மக்களுக்கு எது உண்மை என யோசிக்க தெரியல. எந்த பக்கம் சரி, பிழை என்றும் தெரியல, எல்லாம் PR பண்ணுற வேலை தான் என ரவீனா சொல்லி இருப்பார்.


இதன் போது,  அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் உள்ள கேமராவை பார்க்கிறார். இது பார்ப்போருக்கு சற்று சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எனினும், அர்ச்சனாக்கு மட்டும் PR இல்லை, பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட எல்லாருக்கும் தான் இருக்கு. PRஎன்பது ஒரு வகையான வியாபாரம் இதனை விஜய் டிவி கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும்  சமூகவலைத்தளங்களில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

அதேவேளை, அர்ச்சனா நீ டைட்டில் வின் பண்ணினா எனக்கு 50 லட்சத்தில 10 லட்சம் கொடு என்று ப்ரொவோ சொல்லி இருந்தார். அதுக்கு அர்ச்சனா, 50 லட்சமும் மொத்தமா தாரேன் பரவாயில்லை என்று சொல்லி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement