• Oct 30 2024

குழந்தை மகாலட்சுமி மாதிரி இருக்கா... குழந்தைக்கு பெயர் வைத்த அறந்தாங்கி நிஷா...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

அறந்தாங்கி நிஷா வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை வாசிகளுக்கு உதவி செய்துவருகிறார். இந்நிலையில் மகிழ்ச்சி அடைந்த மக்கள் தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


அறந்தாங்கி  நிஷா திருச்சியில் இருந்து சென்னைக்கு வருகை தந்து புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கான உணவுகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் பல இடங்களுக்கும் சென்று அவர்களுக்கு தேவையான பொருட்களையும் , உணவுகளையும் வழங்கி வருகிறார். 


அப்படி ஒரு ஊருக்கு உணவு மற்றும் அத்தியவசிய பொருட்கள் வழங்குவதற்கு சென்றிருந்த போது மக்கள் மகிழ்ச்சி அடைந்து பொருட்களை பெற்று கொண்டனர். மேலும் அங்கு பிறந்திருந்த பெண்குழந்தை ஒன்றிற்கு பெயர் வைக்குமாறு அறந்தாங்கி நிஷாவிடம் கொடுக்கவே அவர் " குழந்தை நல்ல ஆரோக்கியமா இருக்கா என்னை நம்பி கையில தந்து இருக்கீங்க , பொண்ணு மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கிறா அதுனால மஹாலக்ஷ்மின்னு பேர் வைக்கிறேன் என்று பெயர் வைத்து பெற்றோரை மகிழ்ச்சிபடுத்தியுள்ளார்.   

Advertisement