• Oct 23 2025

காதி பட டிரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!மகிழ்ச்சியில் அனுஷ்காவின் ரசிகர்கள்!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, கடந்த ஆண்டு வெளியானMiss Shetty Mr Polishetty திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார். அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது காதி (Ghaati) எனும் புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


இந்த படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார். இதன் மூலம் தமிழ் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கு சினிமாவில் தனது அறிமுகத்தை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இப்படம், இதனுடைய தனித்துவமான கதை மற்றும் நடிப்புத் திறமைகளால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


முந்தைய அறிவிப்பின்படி, காதி திரைப்படம் ஜூலை 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், ரசிகர்களுக்கான ஒரு சிறப்பு அறிவிப்பாக, காதி படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்ட புதிய போஸ்டரில் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement