• Feb 20 2026

ஸ்லீவ்லெஸ் ட்ரெஸ்ஸில் அசத்தலாக போஸ் கொடுத்த அனுபமா.. லீக்கான லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் அறிமுகமாகி, குறுகிய காலத்திலேயே தென்னிந்திய ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த நடிகைகளில் முக்கியமானவர் அனுபமா பரமேஸ்வரன். இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமான அனுபமா, முதல் படத்திலேயே அபாரமான வரவேற்பைப் பெற்றார். இயல்பான நடிப்பு, சிரிப்பு மற்றும் அழகான முகபாவனைகள் மூலம், அவர் ஏராளமான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.


அந்த ஒரு படமே அனுபமாவை ஒரு ஸ்டார் நடிகையாக மாற்றியது. அதன் பிறகு, மலையாளம் மட்டுமல்லாமல், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.

தமிழ் சினிமாவில், நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடித்த ‘கொடி’ திரைப்படம் மூலம் அனுபமா அறிமுகமானார். அரசியல் பின்னணியை கொண்ட இந்த படத்தில், அவரது நடிப்பு ரசிகர்களிடையே கவனம் பெற்றது. முதல் தமிழ் படத்திலேயே, கதைக்கு தேவையான அளவில் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். 


‘கொடி’ படத்திற்குப் பிறகு, அனுபமா தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடித்தார். இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்த பல தெலுங்கு படங்கள், அவருக்கு பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கின.

திரைப்படங்களைத் தாண்டி, அனுபமா பரமேஸ்வரன் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் தனது தினசரி வாழ்க்கை, படப்பிடிப்பு அனுபவங்கள், ஃபேஷன் போட்டோஷூட்கள் என அடிக்கடி பதிவுகளை பகிர்ந்து வருகிறார். 

இந்நிலையில், அனுபமா சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய போட்டோ ஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில், அவர் மிகவும் அழகாகவும், ஸ்டைலிஷாகவும் காணப்படுகிறார். எளிமையும் நவீன ஃபேஷனும் கலந்த அவரது லுக், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement